Friday 31 January 2020

பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ.!😊

இன்பினிக்ஸ் நிறுவனம் எப்போதுமே பட்ஜெட் விலையில் அருமையான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 2020-ல் தனது முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்கு கீழ் இருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
Infinix S5 Pro

👉🏻அன்மையில் ஹானர் நிறுவனமும் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.10,000-க்கு மேல் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்தது. ஆனால் வரவிருக்கும் இந்த இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அதைவிட மலிவான விலையில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉🏻வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மீடியாடெக் சிப்செட் வசதிகள் தான் அதிகம் இடம்பெருகின்றன.

Infinix S5 Pro

இதுவரை மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதிகள் கொண்ட ஆறு ஸ்மார்ட்போன்களையும், பின்பு மீடியாடெக் ஹீலியோ பி 25 கொண்டு இயங்கும் ஒரு ஸ்மார்ட்போனும், ஹீலியோ ஏ22 சிப்செட் வசதியுடன் இரண்டு ஸ்மார்போனையும் அறிமுகம் செய்துள்ளதுஇந்நிறுவனம்.

இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் டிஸ்பிளே அல்லது 6.6-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்பு பேனலில் க்வாட்-கேமரா அமைப்பு மற்றும் சிறந்த பேட்டரி வதியுடன இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Infinix S5 Pro

🔷இதற்குமுன்பு வெளிவந்த இனிபினிக்ஸ் எக்ஸ் 5லைட் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.7,999-க்கு வாங்க கிடைக்கிறது,மேலும் இந்த சாதனம் 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸபிளே மற்றும் 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்தது. மேலும் இதில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

No comments:

Post a Comment

RedmiNote 10 Retail Box 😎😎😎Amoled Display

Yesterday we saw the upcoming Redmi Note 10 Pro's retail box and today we have the non-Pro's as well. And as far as retail boxes go,...